மோடிக்கு ஹிந்துத்துவத்தின் அடிப்படையே புரியவில்லை - ராகுல் காந்தி விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 12:18 pm
rahul-gandhi-speech-among-business-community-in-rajasthan

ஹிந்து மதத்தின் அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாதவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். அவர் என்ன மாதிரியான ஹிந்து? என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக இன்று ராஜஸ்தான் சென்றுள்ள ராகுல் காந்தி, தொழில்துறையினருடன் காலையில் உரையாடினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

ராணுவத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை, ராணுவத்தினரைக் காட்டிலும் தமக்கே அதிகம் தெரியும் என பிரதமர் மோடி நினைத்துக் கொள்கிறார். இதேபோன்று, வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது வெளியுறவுத்துறை அமைச்சரை விடவும், வேளாண்துறை அமைச்சகத்தில் என்ன செய்ய வேண்டு என்பது வேளாண்துறை அமைச்சரை விடவும் தமக்கே நன்றாகத் தெரியும் என மோடி நினைத்துக் கொள்கிறார். ஏனென்றால், அனைத்து அறிவும் தனது மூளையில் இருந்து உதிப்பதாகவே மோடி நம்புகிறார்.

ஹிந்துத்துவத்தின் சாரம் என்ன? கீதை என்ன சொல்லியிருக்கிறது?  ’அறிவு எல்லோரிடத்திலும் இருக்கிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் இருக்கிறது. ஒவ்வொரு உயிரிடத்திலும் அறிவு இருக்கிறது’ என்பதே. நமது பிரதமர், தான் ஒரு ஹிந்து எனக் கூறிக் கொள்கிறார். ஆனால், ஹிந்துவத்தின் அடிப்படையே அவருக்குப் புரியவில்லை. என்ன மாதிரியான ஹிந்து அவர்?

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நரேந்திர மோடி நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, இதுபோன்று 3 முறை தாக்குதல் நடத்தியிருக்கிறார். பாகிஸ்தானின் அடாவடிகளுக்கு பதிலடி கொடுக்க விரும்புவதாகவும், ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அதுகுறித்து ரகசியம் காக்க வேண்டும் எனவும் மன்மோகன் சிங்கிடம் ராணுவத்தினர் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், மோடி இவ்வாறு ரகசியம் காப்பதை விரும்பவில்லை. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில், தோல்வி முகமாக இருந்ததால், ராணுவ விஷயத்தை, அரசியல் விஷயமாக அவர் மாற்றி விட்டார் என்றார் ராகுல் காந்தி.


newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close