குடியரசு தின விழாவுக்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர் இவர்தான்!

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 09:12 am
south-african-president-invited-to-india-s-republic-day

ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படவுள்ள இந்திய குடியரசுத் தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஷா வருகை தரவுள்ளார். அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்கு இடையே, ராமபோஷாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது மோடி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “சிரில் ராமபோஷாவின் இந்தியப் பயணம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் குடியரசு தின விழா என்ற சிறப்பு நிகழ்வின்போது அப்பயணம் நடைபெறவுள்ளது. இதன் மூலம் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான பந்தம் மேலும் வலுப்பெறும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினம் அனுசரிக்கப்பட்டு வரும் சமயத்தில், குடியரசு தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக சிரில் ராமபோஷா வருகை தரவிருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்த விஷயம் என்றும் டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குடியரசுதின விழாவில் பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதாகக் கூறி அழைப்பை அவர் நிராகரித்தார். இந்நிலையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிறப்பு விருந்தினராக வருகை தரவுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close