அடடே!  வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டு நாள்கள் கழித்து ஒப்படைத்த அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 11:25 am
ec-officer-who-submitted-evms-after-2-days-suspended-in-mp

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து, அதை அரசு வாகனங்களில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் என்பது அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விதிமுறை. அதன் பிறகு அந்த இயந்திரங்கள் ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாலும், வேட்பாளர்களின் முகவர்கள் அங்கேயே தங்கி தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.

ஆனால், தேர்தல் நடைபெற்று முடிந்து இரண்டு நாள்கள் கழித்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை சாவகாசமாக எடுத்துச் சென்று ஒப்படைத்திருக்கிறார் ஓர் அதிகாரி. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 28ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால், நயப் என்ற தாலுகாவிற்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேரவில்லை. அந்தத் தாலுகாவின் தாசில்தாரும், தேர்தல் அதிகாரியுமான ராஜேஷ் மெஹ்ரா, இரண்டு நாள்கள் கழித்தே அந்த இயந்திரங்களை ஒப்படைத்திருக்கிறார்.

இதுகுறித்து அறிந்த காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததுடன், போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரியினுடைய பரிந்துரையின் அடிப்படையில், ராஜேஷ் மெஹ்ரா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close