பொறி பறக்கும் தெலுங்கானா - வட்டமிடும் தலைவர்கள்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 12:21 pm
telangana-political-parties-in-election-campaign

தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம், வரும் 5ம் தேதியுடன் நிறைவுபெறவுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அங்கு பிரசாரத்துக்காக முகாமிட்ட வண்ணம் உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில், வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர் ராவ், அவரது மகனும், அமைச்சருமான ராம ராவ் ஆகியோரும், சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் அக்கட்சிக்காக மிகத் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தெலுங்கானாவில் பிரசாரம் செய்துள்ளனர். இதேபோன்று நடிகைகளும், கட்சி நிர்வாகிகளுமான நக்மா, குஷ்பு போன்றோரையும் அக்கட்சி பிரசாரத்தில் களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் அமைத்துள்ள மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் அங்கு பிரசாரம் செய்து வருகிறார்.

பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று பிரசாரம் செய்யவுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரசாரம் செய்யவுள்ளார். இறுதிகட்ட பிரசாரங்கள் காரணமாக தெலுங்கானா தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close