நாட்டின் வளர்ச்சிப் பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: அமித் ஷா குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 04:43 pm
trs-congress-busy-in-minority-appeasement-amit-shah

சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதில்தான் காங்கிரஸும்,  தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும் (டிஆர்எஸ்) கவனம் செலுத்துகின்றனவே தவிர, நாட்டின் வளர்ச்சிப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 7-ஆம் தேதி தேர்தல் நடைரபெறவுள்ள நிலையில், அங்கு பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாராயணன்பேட்டை எனும் இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது அமித் ஷா பேசியது:

முஸ்லிம்களுக்கு 12 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தொடர்ந்து கூறி வருகிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்பதால், இதனை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.

'தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினருக்கு தனியாக மருத்துவமனை கட்டித் தரப்படும்' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிக் கொண்டிருக்கிறார். அப்படியானால், சிறுபான்மையினர் அல்லாத ஏழைகள் என்ன பாவம் செய்தனர் என அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

'உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்து வருகிறார். அப்படியெனில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை என்ன?
காங்கிரஸும், டிஆர்எஸ்ஸும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதில் மட்டுமே தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன.

இவர்களுக்கு, நாட்டின் வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் மோடி மற்றும் பாஜகவை கண்டு பயம் என அமித் ஷா பேசினார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close