மூன்று மோடிகள்: சித்து கிண்டல் !

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 05:37 pm
four-gandhis-three-modis-sidhu-speech

காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி உள்ளிட்ட  நான்கு காந்திகளை தேசத்துக்கு தந்துள்ளது. ஆனால் பாஜக, அம்பானிக்கு சாதகமாக  செயல்படும் நரேந்திர மோடி போன்ற  மூன்று மோடிகளைதான் கொடுத்துள்ளது என பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கிண்டலாக கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம், ராம்கஞ்ச் மந்திர் எனும் இடத்தில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய சித்து, ”ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து தேசத்துக்கு விடுதலை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் என்ற வரலாற்றை யாரும் மறுக்க முடியாது. அத்துடன், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என நான்கு காந்திகளை காங்கிரஸ் இந்த தேசத்துக்கு அளித்துள்ளது. ஆனால்,லலித் மோடி, நீரவ் மோடி மற்றும் அம்பானிக்கு சாதகமாக செயல்படும் நரேந்திர மோடி என மூன்று மோடிகளைதான் பாஜக நாட்டுக்கு தந்துள்ளது.

பாஜக ஆட்சியில் குண்டர்களால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருகிறது” என பேசினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close