சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, தேசத்துரோகம்: மோடி

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 04:46 am
minority-reservation-is-an-act-of-treason-modi

சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு, தேசத் துரோகத்துக்கு சமம் என்றும், இந்திய அரசியல் சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

தெலுங்கான சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுபான்மையினருக்கு அம்மாநில அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கயதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்பது, தேசத்துரோகம் என கடுமையாக சாடினார். தெலங்கானா மாநிலத்தை ஆண்டு வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு, சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை, 12 சதவீதமாக உயர்த்தியது.

இது மதரீதியாக கோட்டா வழங்கும் ஒரு செயல் என்றும், ஆட்சிக்கு வருவதற்காக இதுபோன்ற மோசமான கொள்கைகளில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். "இந்த கூடுதல் இட ஒதுக்கீடு எங்கிருந்து வருகிறது? ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஒதுக்கீடுக்கான உச்சவரம்பு 50% என உத்தரவிட்டுள்ளது. இந்த கூடுதல் இடஒதுக்கீட்டின் மூலம், தலித்துகள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரிடமிருந்து உரிமைகளை வாங்க பார்க்கிறார்கள். இந்த குற்றத்தை நீங்கள் விடுவீர்களா?" என மோடி பேசினார். மேலும், "காங்கிரஸ் இந்தியாவை நாசமாக்கியது போல, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, அம்மாநிலத்தை நாசமாக்கி வருவதாக வும் மோடி விமர்சித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close