என்னை பதவிநீக்கம் செய்ய முடியுமா? - பா.ஜ.க.வுக்கு மத்திய அமைச்சர் சவால்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 09:09 am
central-minister-kushwaha-s-challenge-against-bjp-govt

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா, தன்னை பதவிநீக்கம் செய்ய முடியுமா? என்று பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்துள்ளார். 

பிகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும், முதல்வர் நிதீஷ் குமாருடனும் குஷ்வாஹா தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்துவரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடம் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று வெளிப்படையாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத குஷ்வாஹா, தங்கள் கட்சிக்கு 2 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கப்படும் என்பதை நவம்பர் 30ம் தேதிக்குள் பா.ஜ.க. முடிவு செய்ய வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். அந்தக் கெடு முடிவடைந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்வாஹா, “நான் இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறேன். மே மாதம் பதவிக்காலம் முடியும் வரையில் அமைச்சராக நீடிப்பேன். பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே என்னை பதவிநீக்கம் செய்ய முடியும்’’ என்றார்.

கூட்டணியில் உள்ள போதிலும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை தொடர்ந்து  விமர்சித்து வந்த நிலையில், அவரது அரசுக்கு எதிராக, வரும் 8ம் தேதி உண்ணாரவிரத போராட்டத்தையும் குஷ்வாஹா அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close