மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்; முறைகேட்டுக்கு வழியில்லை - ம.பி. தலைமை தேர்தல் அதிகாரி 

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 09:54 am
madhya-pradesh-ceo-refused-the-tampering-of-evms

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வரும் நிலையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வி.எல்.காந்தா ராவ் அந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இயந்திரங்களும் உடனடியாக மாவட்ட தலைமையகங்களில் உள்ள அறைகளுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை வேட்பாளர்கள் கண்காணிப்பதற்கு ஏதுவாக, அப்பகுதியில் கொட்டகை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை அமைக்க முடியாத இடங்களில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவப் படையினரும், இரண்டாம் அடுக்கில் மாநில ஆயுதப்படையினரும், மூன்றாம் அடுக்கில் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார் அவர். சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு நாள்கள் கழித்து கொண்டு வரப்பட்டதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அந்த இயந்திரங்கள் மாற்று ஏற்பாடாக கொண்டு செல்லப்பட்டவை. அவற்றில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

இங்கு கடந்த 28ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடத்த முயற்சி நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது. அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close