நாடாளுமன்றக் கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 11:26 am
parliament-winter-session-all-party-meet-in-december-10

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி தொடங்கவுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு நடத்தவுள்ள முழு முதல் கடைசி கூட்டத்தொடர் என்பதால், இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, வரும் 10ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோன்று, மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜனும் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. 

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் அதே நாளில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்த முடிவுகள் குறித்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு விஷயங்கள் நாடாளுமன்ற அவைகளில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.

மத்திய அரசின் சார்பில், நிலுவையில் உள்ள மிக முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதே சமயம், ரஃபேல் விமான ஒப்பந்தம், சிபிஐ தலைமை அதிகாரிகளை கட்டாய விடுப்பில் அனுப்பியது உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எனத் தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close