பாரிக்கரின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் இன்று அறிக்கை?

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 10:29 am

goa-govt-to-sumbitt-health-report-of-parikar-to-court

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில், அந்த மாநில அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

மனோகர் பாரிக்கர், கனைய அழற்சி நோய் காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அமெரிக்காவுக்கு இரண்டு முறை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அதேபோன்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் பாரிக்கர் சிகிச்சை பெற்றார். அதற்குப் பிறகு வீடு திரும்பிய அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார்.

இதற்கிடையே, பாரிக்கர் உடல்நலமின்றி இருப்பதால், அரசு நிர்வாகம் முடங்கியிருப்பதாகக் கூறிய எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்த தொடங்கின. இந்நிலையில் கோவா முன்னணி கட்சியைச் சேர்ந்த டிரஜனோ டி மெல்லோ என்பவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பாரிக்கரின் உடல்நிலை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அவர் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

அந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.எம்.போர்தே, பிரிதிவிராஜ் கே.சவாண் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது பாரிக்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவா அரசின் தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, அரசு  அறிக்கை தாக்கல் செய்யுமா என்பது இன்று பிற்பகலில் தெரியவரும்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.