தேர்தல் சமயங்களில் சிவன் பக்தராக மாறும் ராகுல் காந்தி - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல்

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 11:06 am

rahul-gandhi-becoming-shiva-bukth-during-elections-smiriti

தேர்தல் வரும் சமயங்களில் மட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிவன் பக்தராக மாறி விடுகிறார் என்று மத்திய அமைச்சரும், பா.ஜ.க. முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ராமகுண்டடம் பகுதியில் பிரசாரம் செய்தபோது அவர் இதனை தெரிவித்தார். ஸ்மிருதி இரானி பேசியதாவது:

இன்னும் எத்தனை காலத்துக்கு மதத்தின் பெயரால் மக்களிடம் நீங்கள் பிளவையும், குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பீர்கள்? நான் இதை ஏன் கூறுகிறேன் என்றால், இந்தத் தொகுதி ராமகுண்டடம் என்ற பெயரால் அமைந்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு குழந்தைகளும் ராமரின் பெயரால் அறியப்படுகின்றனர். 

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ராமரே இல்லை என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். ஆனால், தேர்தல் வந்துவிட்டால், சிவ நாமங்களை உச்சரிப்பதோடு, சிவன் பக்தராகவும் ராகுல் காந்தி மாறிவிடுகிறார்.

தெலுங்கானா மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் அடிமட்ட அளவில் சென்று சேருவதற்கு தெலுங்கானா முதல்வர் தடை போட்டுவிட்டார் என்றார் இரானி. மற்றொரு இடத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 7 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close