பிகாரில் பா.ஜ.க. கூட்டணியில் பிளவு? - இன்று வெளியாகும் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 09:15 am

rlsp-may-split-from-nda-alliance-today

பிகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி இன்று முடிவு செய்யவுள்ளதாகத் தெரிகிறது. அக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா தலைமையில் 3 நாள் நடைபெறும் உயர்நிலைக் கூட்டம் இன்று நிறைவு பெறுகிறது. அதில், கூட்டணி குறித்த இறுதி முடிவு வெளியாகவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கப்படும் என்பதை பா.ஜ.க. உறுதி செய்ய வேண்டும் என லோக் சமதா கட்சி விடுத்திருந்த கெடு கடந்த மாதம் 30ம் தேதியுடன் நிறைவடந்தது. கடந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் அக்கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை கூட்டணியில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டியிருக்கும் சூழலில், லோக் சமதா கட்சிக்கான இடங்களை குறைக்கும் முடிவில் பா.ஜ.க. இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், உயர்நிலைக் குழு கூட்டத்தில் கூட்டணி நீடிப்பது குறித்து லோக் சமதா கட்சி ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து, உபேந்திர குஷ்வாஹா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் உரிமையை கட்சி என்னிடம் வழங்கியிருக்கிறது.  இருப்பினும், மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளேன். அவர்கள் தங்கள் தரப்பின் கவலைகளையும், குறைகளையும் என்னிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். எங்கள் நிலைப்பாடு குறித்து நாளை வெளிப்படையான அறிவிப்பு வெளியாகலாம்’’ என்றார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close