அம்பேத்கர் நினைவுநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 12:04 pm
modi-and-other-s-tribute-to-ambedkar

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கருக்கு இன்று காலை மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு, மோடி ஆகியோரும், மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன் மற்றும் பல எம்.பி.க்களும் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினர்.

டுவிட்டரில் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட பதிவில், “அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு இந்த தேசம் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவரது அறிவு நம்மை எப்போதும் வழிநடத்தும். ஜாதிகளற்ற சமூகத்தை உருவாக்க பெரிதும் பாடுபட்டவர் அவர். பொதுவாழ்வில் நேர்மையை கடைப்பிடிப்பதன் மூலமாக அம்பேத்கருக்கான உண்மையான அஞ்சலியை நாம் செலுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கரின் நினைவு நாளில் இந்தியா தலைவணங்குகிறது என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் சிறப்புகளை விளக்கிக் கூறும் ஆடியோ ஒன்றையும் அவர் அந்தப் பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close