மேகதாது விவகாரம்: தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 01:36 pm

mekedatu-dam-issue-karnataka-minister-writes-letter-to-tn-cm-edappadi-palanisamy

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார். 

மேகதாது பகுதியில் அணைக்கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக விவசாயிகள்மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக போராட்டமும் நடத்தின. 

இதற்கிடையே, டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடி விவாதம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம். பேச்சுவார்த்தை நததத நேரம் ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். 

newstm.in

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.