தெலுங்கானா, ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கிருச்சு - வாக்குப்பதிவு நிலவரம் இதோ

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 08:59 am
elections-in-rajasthan-and-telangana-voting-percentage

மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா, 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.

தெலுங்கானாவில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவுபெறுகிறது. இங்கு 9 மணி நிலவரப்படி 8.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 31 மாவட்டங்களில் 32,815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில் 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை தேர்வு செய்வதற்காக 2.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலையொட்டி மத்திய ரிசர்வ் போலீஸ், மாநில காவல்துறை உள்பட 50,000 பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி இடையிலும், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் அமைத்துள்ள மகா கூட்டணிக்கு இடையிலும் நேரடிப் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது.

ராஜஸ்தானில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 2,274 வேட்பாளர்களும், 4.74 கோடி வாக்காளர்களும் உள்ளனர். இங்கு காலை 9 மணி நிலவரப்படி 6.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கார் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அண்மையில் காலமானார். இதனால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close