நான் தலைப்பாகை அணியும் நாள் விரைவில் வரும்: காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 02:44 pm
rajasthan-elections-congress-will-win-with-majority-says-sachin-pilot

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட் அக்கட்சி ஆட்சியில் அமரும் வரை பாரம்பரிய தலைப்பாகை அணிய மாட்டேன் என சபதம் செய்திருந்தார். இந்நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும், நான் தலைப்பாகை அணியும் நாள் விரைவில் வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையடுத்து, அடுத்த முறை ஆட்சிக்கு வரும் வரை டர்பன் அணியமாட்டேன் என சபதம் செய்தார் சச்சின் பைலட். இதன்பின்னர் அடுத்த சட்டசபை தேர்தல் இன்று ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. 

இந்த தேர்தலில் இன்று காலை ஜெய்ப்பூரில் வாக்களிக்க வந்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "எங்களது கட்சி 2014ல் மிக மோசமாக தோற்றபோது எங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக அணியும் டர்பனை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் வரை அணிவதில்லை என்று சபதம் ஏற்றேன். 

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட சிலர் டர்பனை பரிசாக வழங்கினர். ஆனால், அதை அணியாமல் வைத்துக்கொண்டேன். தற்போது மக்களின் ஆதரவுடன் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெல்லும். நானும் டர்பனை அணியும் நேரம் விரைவில் வரும்" என்று தெரிவித்துள்ளார். 

சச்சின் பைலட் முதல் முறையாக முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டாங்க் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் சச்சினுக்கு எதிராக பா.ஜ.க சார்பில் யூனுஸ் கான் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close