கேள்வி கேட்பாரின்றி சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 10:08 am
a-ballot-unit-found-in-roadside-in-rajasthan

தேர்தலில் வேட்பாளர்களின் பெயர்களையும், சின்னங்களையும் பட்டியலிடும் பேலட் இயந்திரம் ஒன்று ராஜஸ்தானில் நேற்று சாலையில் கிடந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. மொத்தம் 199 தொகுதிகளில் 52,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதைத்தொடர்ந்து, தேர்தல் தொடர்பான வாக்கு கணிப்புகளை பல்வேறு அமைப்புகள் வெளியிட்டன. இதுதொடர்பான செய்திகளின் பரபரப்பு ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருந்த அதே சமயத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மற்றொரு விஷயமும் தெரியவந்தது. அதாவது பாரன் மாவட்டம், கிஷான்கஞ்ச் தொகுதிக்கு உள்பட்ட சஹாபாத் என்ற இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று கேள்வி, கேட்பாரின்றி கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து இயந்திரத்தை கைப்பற்றி கொண்டு சென்றனர். மிகவும் அலட்சியத்துடன் செயல்பட்டு அந்த இயந்திரத்தை தொலைப்பதற்கு காரணமாக இருந்த இரண்டு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிடைநீக்கம் செய்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close