காங்கிரஸ் தலைவரை காலையிலேயே தூக்கிச் சென்ற அமலாக்கத்துறை!!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 11:46 am
ed-raid-on-congress-leader-jagdish-sharma-s-residence-in-early-morning

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரும், டெல்லியைச் சேர்ந்தவருமான ஜெகதீஷ் சர்மாவின் இல்லத்தில் இன்று காலையிலேயே அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அந்த அதிகாரிகள் ஜெகதீஷை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது வீட்டில் ஏன் சோதனை நடத்தப்பட்டது? அவரிடம் எதற்காக விசாரணை நடத்தப்படுகிறது? என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தம் இத்தாலி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டபோது முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை சிபிஐ அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிறுவனங்களில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் மற்றும் அவரோடு தொடர்புடைய மற்றொரு நபர் என மொத்தம் 3 பேருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அந்தச் சோதனையும் எதற்காக நடத்தப்பட்டது என விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஆனாலும், கிறிஸ்டியன் மைக்கேலிடம் சிபிஐ நடத்தும் விசாரணைக்கும், அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் அதிரடியான சோதனைகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்புகள் இருக்குமா? என்ற சந்தேகமும் எழுகிறது. அதே சமயம், அமலாக்கத்துறையின் சோதனைகளை மோடி அரசினுடைய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close