கட்சியே பிரதானம்; பிறகுதான் முதல்வர் பதவியெல்லாம் - கெத்து காட்டிய காங்கிரஸ் தலைவர்

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 11:21 am
ashok-gelot-reply-about-chief-minster-s-post

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், நீங்கள் முதல்வராகப் பதவியேற்பீர்களா? என்று கேள்வி அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட்டிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, முதலில் கட்சியே பிரதானம், பிறகுதான் முதல்வர் பதவியெல்லாம் என்று அவர் பதில் அளித்தார். இவர் இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து வெளியான வாக்கு கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அசோக் கெலாட், மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்த மூத்த தலைவர் ஆவார். அதே சமயம், இளம் தலைவரான சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்த இருவரில் முதல்வராகப் பதவியேற்கப் போவது யார்? என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், அசோக் கெலாட் இதுகுறித்து கூறியபோது, “தற்போதைய சூழலில் கருத்து வேறுபாடுகளை உருவாக்க வேண்டாம் என்பதே எனது எண்ணம். எனது வாழ்க்கையில் எந்தவொரு பதவிக்கும் நான் முன்னுரிமை அளித்ததில்லை. எனது எண்ணமெல்லாம் காங்கிரஸ் கட்சியை எப்படி பலப்படுத்தலாம் என்பது குறித்துதான். கட்சியின் நலனுக்கு எது நல்லது என்ற அடிப்படையில் கட்சி மேலிடம் என்ன பொறுப்பு வழங்குகிறதோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்’’ என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close