மத்திய அமைச்சருக்கு அறை விட்ட இளைஞர்!!

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 09:30 am
youth-assaulted-union-minister-ramdas-athawale

மகாராஷ்டிர மாநிலத்தில், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதாவாலேவை இளைஞர் ஒருவர் திடீரென தள்ளவிட்டு கன்னத்தில் அறைந்தார். அவர் எதற்காக இதைச் செய்தார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதாவாலே, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறையின் இணையமைச்சராக இருக்கிறார். மகாராஷ்டிர மாநிலம், அம்பர்நாத் நகரில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கி வந்த ராம்தாஸ் அதாவாலேவை இளைஞர் ஒருவர் திடீரென கீழே தள்ளிவிட்டு கன்னத்தில் அறைந்தார்.

இதையடுத்து, ராம்தாஸின் ஆதரவாளர்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர். அங்கிருந்த பாதுகாவலர்களும், காவல்துறையினரும் அந்த இளைஞரை வெளியே இழுத்துச் சென்று கைது செய்தனர். தாக்குதல் நடத்திய இளைஞரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்தான் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் எதற்காக இதைச் செய்தார் என்ற காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close