தெலங்கானாவில் மண்ணைக் கவ்விய ‘மகா கூட்டணி’

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 01:09 pm
massive-defeat-of-grand-allinace-in-telangana

அரசியலில் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து ‘மகா கூட்டணி’ அமைத்து தேர்தலை சந்திக்கும் வியூகத்தை காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக கையாண்டு வருகிறது. இந்த முயற்சியில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி கிடைத்தது. கர்நாடகத்தில் தேர்தலுக்குப் பிறகு, மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது.

அந்த வகையில், தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சியை தோற்கடிப்பதற்காக மகா கூட்டணியை அமைத்தது காங்கிரஸ். குறிப்பாக, பரம எதிரிகளாகக் கருதப்பட்ட ராகுல் காந்தியும் - சந்திரபாபு நாயுடுவும் கைகோர்த்தனர். இவர்களது காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவற்றுடன் இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு தேர்தலில் மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர்.

ஆனால், தனிக்காட்டு சிங்கம் போல, தனித்து களமிறங்கிய சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். கட்சியை மகா கூட்டணியால் வீழ்த்த முடியவில்லை. டி.ஆர்.எஸ். கட்சி 46.9 சதவீத வாக்குகளுடன் 88 இடங்களில் வெற்றி பெற்றது. 4 கட்சிகளுடன் களமிறங்கிய காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புலம்ப ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close