ராகுல் காந்தியை சந்திக்க ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி விரைவு - புதிய முதல்வர் யார்?

  Newstm Desk   | Last Modified : 13 Dec, 2018 08:55 am
rajasthan-congress-leaders-to-meet-rahul-gandhi-amid-cm-race


ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்னும் தீர்மானிக்காத நிலையில், அப்பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் டெல்லிக்கு இன்று புறப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர்கள் சந்திக்க உள்ளனர். அப்போது புதிய முதல்வர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் அவரவர் ஆதரவாளர்கள் குரல் கொடுத்த நிலையில், ஒருமித்த கருத்துடன் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் போனது. இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு மாநில ஆளுநர் கல்யாண் சிங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில், 199 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மை கிடைக்காத அக்கட்சிக்கு, ஒரு இடத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி ஒன்றின் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close