மத்தியப் பிரதேச முதல்வராக டிச.17ல் பதவியேற்கும் கமல்நாத்!

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 11:05 am
kamal-nath-to-take-oath-on-december-17

மத்தியப் பிரதேச மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத்தின் பதவியேற்பு விழா, வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 17) நடைபெறவுள்ளது. அவரது அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களுடன் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் குறைவாகவே பெற்ற போதிலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.

முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் மூத்த கமல்நாத் மற்றும் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதுகுறித்து மேலிட கண்காணிப்பாளர்கள் தெரிவித்த ஆலோசனைகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் நேற்று தீவிர ஆலோசனை நடைபெற்றது.

நீண்ட நேர அலோசனைக்குப் பின்னர், கமல்நாத்தை புதிய முதல்வராக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் வரும் 17ம் தேதி பதவியேற்கவுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close