மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஸோரம்தங்கா பதவியேற்றார்!

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 12:21 pm
mizo-national-front-president-zoramthanga-to-be-sworn-in-as-the-chief-minister-of-mizoram

மிசோ தேசிய முன்னணி கட்சி மிசோரம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா இன்று  முதல்வராக பதவியேற்றார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும், தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, அதேபோன்று மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கின்றன. 

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாஜக வெறும் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், மிசோரம் மாநிலத்தின் முதல்வராக மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா இன்று பதவியேற்றுள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜசேகரன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னதாக இரண்டு முறை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஸோரம்தங்கா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close