ம.பி, ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்பு!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 09:36 am
three-congress-cms-to-take-oath-today

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற இரு மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வெற்றி பெற்று ஏற்கனவே ஆட்சி அமைத்து விட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 இடங்களில், காங்கிரஸ் 117 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. இம்மாநிலத்தில் அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவியேற்கவுள்ளனர்.

அதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இம்மாநிலத்திற்கான முதல்வர் பூபேஷ் பஹேல் என நேற்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சியினர் ஆரவாரத்தில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close