மேகதாது அணை விவகாரம் - அதிமுக ஒத்திவைப்பு தீர்மானம்

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 01:32 pm
mekedatu-dam-admk-brings-resolution-at-loksabha

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாதத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று பிற்பகல் வரையில் ஒத்தி வைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதையடுத்து, தமிழக அதிமுக எம்.பிக்கள், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் இன்று அதிமுக தரப்பில் இருந்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பின்னர் மக்களவையில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் வரையில் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மாநிலங்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close