இந்தியாவில் சிறுபான்மையினர் குடியரசுத்தலைவர் ஆகலாம்; பாகிஸ்தானில் முடியுமா? - இம்ரானுக்கு ஒவைஸி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 10:03 am
owasi-questions-pak-pm-imran-khan-over-minority-rights

இந்தியாவில் சிறுபான்மையினர் குடியரசுத்தலைவராக வர முடியும். பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் எவராவது அதிபர் ஆக முடியுமா? என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானுக்கு, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கேள்வி எழுப்பியுள்ளார். 

சிறுபான்மையினரை வழிநடத்துவது குறித்து மோடி அரசுக்கு பாடம் எடுக்கத் தயார் என்று இம்ரான் கான் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒவைஸி இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் இந்தியாவிடம் இருந்து அறிவை கடனாகப் பெற்றுக் கொள்ளுமாறு இம்ரானுக்கு ஒவைஸி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் ஒவைஸி வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தான் அரசியல்சாசன அமைப்பின்படி முஸ்லிம் மட்டுமே அதிபர் ஆக முடியும். ஆனால், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் பலர் குடியரசுத்தலைவராக இருந்திருக்கின்றனர். அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் இந்தியாவிடம் இருந்து இம்ரான் கான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது’’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உதயமானபோது 20 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் மக்கள் தொகை தற்போது 3 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close