ஜிஎஸ்டி வரியை குறைக்க கமுக்கமாக எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 12:16 pm
opposition-parties-including-congress-not-agreed-to-reduce-gst-tax

ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சித்து வருகின்றன. ஆனால், 99 பொருள்களின் ஜிஎஸ்டி வரியை குறைப்பது என மத்திய அரசு அண்மையில் முடிவு செய்தபோது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு மட்டும் எவ்வித எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை.

ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-ஆவது கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர்கள் தலைமையிலான இக்குழுவில் மாநில நிதியமைச்சர்களும் இடம்பெற்றிருப்பர். ஜிஎஸ்டி வரி நிர்ணயம் குறித்து இந்தக் குழுவில் ஆலோசனை நடத்துவதன் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.

அந்த வகையில், அண்மையில் நடந்தக் கூட்டத்தில் டி.வி., கணினி உள்ளிட்ட பொருள்களின் ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து, பின்னர் வரி குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக, ஜிஎஸ்டி வரியை குறைக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேரள அரசு, காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி அரசு, திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க அரசு உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஜிஎஸ்டி வரியை குறைத்தால், தேர்தல் சமயத்தில் இதை வைத்து மத்திய அரசை விமர்சிக்க முடியாமல் போகும் என்ற எண்ணத்திலேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி ஆளும் டெல்லி அரசும்கூட ஜிஎஸ்டி வரியை குறைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close