புத்தாண்டில் இருந்து இரண்டாகப் பிரிக்கப்படும் ஹைதராபாத் உயர்நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 11:35 am
hyderabad-high-court-to-be-bifuricated-into-two-from-january-1

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, புதிய மாநிலத்துக்கான பிரத்யேக உயர்நீதிமன்றம் உருவாக்கப்படாமல் இருந்தது. ஹைதராபாதில் உள்ள உயர்நீதிமன்றமே இரு மாநிலங்களுக்கும் பொதுவான உயர்நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் உயர்நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 

ஹைதராபாதில் உள்ள உயர்நீதிமன்றம் தெலுங்கானா மாநிலத்துக்காக ஒதுக்கப்படும். ஆந்திராவுக்கு, மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரில் புதிய உயர்நீதிமன்றம் அமைக்கப்படவிருக்கிறது. முன்னதாக, உயர்நீதிமன்றத்தை பிரிப்பது தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தை பிரிக்கும் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.

ஆந்திர மாநிலத்துக்கான புதிய உயர்நீதிமன்றத்தில் 16 நீதிபதிகள் இடம்பெறுவர். அதில், ரமேஷ் ரங்கநாதன் என்பவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவுக்கான ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close