தீவிரவாதிகளின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குவோம் - காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 12:06 pm
will-provide-one-crore-to-killed-terrorist-s-family-controversy-on-congress-leader-s-speech

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதி என்ற பெயரில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சகீர் கான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் சிறுபான்மை நல அணியின் மேற்பார்வையாளராக செயல்பட்டு வருகிறார்.

அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு பா.ஜ.க. தலைவர்கள்தான் காரணம் என்றும், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அவர்களை தூக்கிலிடுவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சகீர் கான் மேலும் பேசியதாவது:

மக்களுக்கு எதிராக பா.ஜ.க. மேற்கொண்டு வரும் தூண்டுதல்களால்தான் பல அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதி என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுவிப்போம். அப்பாவிகள் உயிரிழக்க காரணமான பா.ஜ.க. தலைவர்கள் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களை தூக்கிலிடுவதற்கான சிறப்புச் சட்டத்தை இயற்றுவோம். அதேபோல, பா.ஜ.க. தொண்டர்களை தூக்கிலிடுவோம் என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close