பழிவாங்கும் அரசியல் ஆரம்பம்! மக்கள் பணம் ரூ.18 கோடி வீண் !!

  விசேஷா   | Last Modified : 04 Jan, 2019 02:01 pm

govt-money-waste

மத்திய பிரதேசத்தில், புதிதாக ஆட்சி அமைத்துள்ள, முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முந்தைய பாரதிய ஜனதா அரசின் திட்டங்களை ரத்து செய்து, அதே திட்டங்களை வேறு பெயர்களில் அமல்படுத்தும் பணியை துவக்கியுள்ளது. காங்கிரஸ் அரசின் முதல் திட்ட அறிவிப்பின் மூலம், மக்கள் வரிப் பணம், 18 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், இதற்கு முன் ஆட்சி செய்த, முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பாரதிய ஜனதா அரசு, வறுமையில் வாடும் தொழிலாளர் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த, ஸ்மார்ட் கார்டு ஒன்றை அறிமுகம் செய்தது. இதற்காக, 18 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியை சேர்ந்த கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். வழக்கமாக, ஆட்சி மாற்றத்திற்குப் பின் நடக்கும் பழிவாங்கும் அரசியலை கையாள்வதில் இவரும் விதிவிலக்கல்ல என்பது போல் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதாவது, முந்தைய பா.ஜ., அரசு அமல்படுத்திய ஸ்மார்ட் அட்டை திட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ள கமல்நாத், பழைய அட்டைக்கு பதிலாக, புதிய அட்டை அச்சடித்து தர உத்தரவிட்டுள்ளார்.

பழைய அட்டையில், முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் படம் இடம் பெற்றிருப்பதால், அந்த அட்டையை, உடனடியாக ரத்து செய்தும் முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

புதிதாக அச்சடிக்கப்படும் அட்டையில், முதல்வர் படம் இடம் பெறாது எனஅறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட அட்டைகளை திரும்ப பெறும் நடவடிக்கையால், மக்கள் வரிப் பணம், 18 கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதால், மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

கமல்நாத் தலைமையிலான புதிய அரசு, முந்தைய அரசின் பல திட்டங்களில் மாற்றத்தை அமல்படுத்தினால், மேலும் பல கோடி ரூபாய் வீணாகும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். கமல்நாத் பழிவாங்கும் அரசியலை கையாள்வதாக, பா.ஜ., தலைவர்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.