காஷ்மீர் தேர்தல்- மெபூபா முப்தியின் புதிய யுக்தி !

  ஸ்ரீதர்   | Last Modified : 04 Jan, 2019 04:10 pm
kashmir-election-mehabooba

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவர முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி புதிய யுத்தியை கையாண்டு வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டமைத்து மெபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநயாக கட்சி ஆட்சி அமைத்தது. இந்த இரு கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் ஜனநாயக கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் வாங்கியது. 

இதனால் அம்மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் மெபூபா முப்தி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகிறார். 

சமீபத்தில் ராணுவ நடவ‌‌டிக்கையில் உயிரிழந்த இரண்டு இளம் பயங்கரவாதிகளுக்கு மெபூபா முப்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். பயங்கரவாதிகளின் குடும்பங்களில் உள்ளவர்கள் விசாரணை என்ற பெயரில் ராணுவத்தினர் தொல்லை கொடுத்து வருவதாக அவர்கள் மெபூபா முப்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close