ராகுலுக்கு ‛தண்ணி’ காட்டும் பவார்!

  விசேஷா   | Last Modified : 04 Jan, 2019 04:12 pm
rahul-shock-due-to-sarath-powar

வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கடும் நிபந்தனைகள் விதித்துள்ளார். இதனால், காங். தலைவர் ராகுல் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, மஹாராஷ்டிராவில் உள்ள, 48 தொகுதிகளில், 26 இடங்களில், காங்கிரசும், 21 இடங்களில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  ஒரு தொகுதி,  மற்றொரு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 

அதில், காங்கிரஸ் வெறும் 2 இடங்களிலும், தேசியவாத காங்., 4 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், விரைவில் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க, சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து, தேசியவாத காங்.,  மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, பிரபுல் படேல் கூறியதாவது: காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதில் எங்களுக்கு பிரச்சனை கிடையாது. எனினும், கடந்த முறை போல் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது. சரத் பவார் - ராகுல் ஆகியோர் இது குறித்து பேச்சு நடத்தி இறுதி முடிவெடுப்பர். இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு, 20 இடங்களும், பிற கூட்டணி கட்சிகளுக்கு 8 இடங்களும் ஒதுக்க சரத் பவார் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரசும், 20 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. சரத் பவாரின் இந்த கிடுக்கிப்பிடி, காங்., தலைவர் ராகுலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close