‛அயோத்தி விவகாரத்தில் அவசர சட்டம் தேவையற்றது’

  விசேஷா   | Last Modified : 04 Jan, 2019 05:05 pm
mahanth-dharam-das-speech

‛‛அயோத்தி விவகாரத்தில், அவசர சட்டம் இயற்றப்படாததே நல்லது. அந்த விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு மிகச் சரியானது,’’ என, நிர்வாணி அகாடாவை சேர்ந்த, மஹந்த் தரம் தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

அயோத்தியில், ராமர் கோவில் கட்ட ஏதுவாக, இது குறித்து அவசர சட்டம் இயற்றப்படவேண்டும் என, சில அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இது குறித்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில்,  இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தற்போதைக்கு அவசர சட்டம் இயற்ற பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமரின்  இந்த நடவடிக்கையை, இந்த வழக்கில் முக்கிய பங்கு வகிக்கும், மஹந்த் தரம் தாஸ் வரவேற்றுள்ளார். 

இது குறித்து, மஹந்த் மேலும் கூறியதாவது, ”அயோத்தி குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போதைய நிலையில், அவசர சட்டம் இயற்றி, கோவில் கட்டும் பணிகளை துவங்குவது சரியானது அல்ல. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விஷயத்தில், பிரதமர் மோடி அவசரப்படாமல் செயல்படுவது வரவேற்கத்தக்கது. தற்போது அவசர சட்டம் பிறப்பித்தால், அது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவாக வாய்ப்புள்ளது. வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில், அதை மேலும் தாமதப்படுத்தும் வகையில் எந்த வித நடவடிக்கையும் அமைந்து விடக்கூடாது”. இவ்வாறு அவர் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close