பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது ரபேல் விவாதத்தில் நிர்மலா கொதிப்பு

  விசேஷா   | Last Modified : 04 Jan, 2019 06:25 pm
nirmala-speech-on-rafale-deal

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், மத்திய பா.ஜ., அரசு ஊழல் செய்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சியினருக்கு தகுந்த பதிலடி தரும் வகையில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் நேற்று உணர்ச்சி பொங்க பேசினார்.


அப்போது அவர் பேசியதாவது, ”ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக,  எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பல முறை விளக்கம் அளித்த பிறகும், அவர்கள் இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது. நான் சொல்லும் விளக்கத்தை கேட்கக்கூட அவர்கள் தயாராக இல்லை. 

நாட்டின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. நம்மை சுற்றியிருக்கும் எதிரிப் படையிடமிருந்து காத்துக்கொள்ள, விமானப் படையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிக தொழில்நுட்பம் உடைய விமானங்களை, சரியான விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான அரசு, நாட்டின் பாகாப்பில் அக்கறை செலுத்தவில்லை. நாட்டின் பாதுகாப்பில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் எதிர்க்கட்சியினரின் சதி வெற்றி பெறாது. 

நான் ராஜகுடும்பத்தில் இருந்து வரவில்லை. சாதரண குடும்பத்தில் இருந்து தான் இங்கு வந்துள்ளேன். மிகப் பெரிய தலைவர்கள் பணியாற்றிய இந்த சபையில் நிற்பதில் பெருமை அடைகிறேன். பிரதமரும் மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளார்.

எங்களை பற்றி தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.  பிரதமர் மோடியை திருடன் என கூறுகின்றனர். இதற்கான அதிகாரம் அவர்களுக்கு யார் தந்தது. பிரதமரை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை.

ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என, உச்சநீதிமன்றமே தெரிவித்த பின்பும், அரசியல் ஆதாயத்திற்காக அது குறித்த பொய்யான தகவல்களை பரப்பி வருவதை ஏற்க முடியாது”.  இவ்வாறு அவர் பேசினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close