ரஃபேல் ஒப்பந்தத்தால் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்: நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 10:27 pm
modi-will-be-back-to-power-because-of-rafale-nirmala-sitharaman

போபர்ஸ் பீரங்கி ஊழல், காங்கிரஸ் கட்சியை கவிழ்த்ததாக கூறிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் என நாடாளுமன்றத்தில் பதிலடி கொடுத்தார்.

நாடாளுமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இன்று நடைபெற்ற விவாதத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமார் 2 மணி நேரம் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். காங்கிரஸ் தரப்பிலிருந்து ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஒவ்வொன்றாக பதிலளித்தார். பணவீக்கத்தை கணக்கிலெடுக்காமல், ரஃபேல் ஒப்பந்தத்தின் விலையை காங்கிரஸ் கட்சி கூறி பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும்; காங்கிரஸ் 18 ஜெட் விமானங்களை மட்டுமே வாங்க ஒப்பந்தம் போட்ட நிலையில், தாங்கள் 36 அதிநவீன ஜெட் விமானங்களை வாங்கியுள்ளதாகவும் சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்புத்துறை எந்தவித இடைத்தரகர்களும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

மேலும் "போபர்ஸ் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால், ரஃபேல் போல அல்லாமல் அது உண்மையான ஊழல். அது உங்களை கவிழ்த்துவிட்டது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும். அவர் தலைமையில், காங்கிரஸை சுற்றியுள்ள ஊழல் ஒழிக்கப்பட்டு, புதிய இந்தியா உருவாகும்" என்று பேசினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close