உ.பி.,யில் காங்கிரசுக்கு ‛கல்தா’ : அகிலேஷ் - மாயாவதி அதிரடி

  விசேஷா   | Last Modified : 05 Jan, 2019 10:52 am
no-seat-for-congress

வரும் மக்களவைத் தேர்தலில், தங்கள் கூட்டணியிலிருந்து காங்கிரஸை கழற்றிவிட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநில அரசியலில் எலியும், பூனையுமாக இருந்த அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் இடையே, அண்மை காலமாக சுமுக உறவு காணப்படுகிறது.  

அந்த மாநிலத்தில், சமீபத்தில் நடந்த மக்களவைத் இடைத்தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தது, ஆளும் பா.ஜ.,வேட்பாளர்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தின. அந்த தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் எளிதில் வெற்றி பெற்றனர். 

இதையடுத்து, இரு கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்திப்பதென முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில், தலா 37 இடங்களில் போட்டியிட,  இரு கட்சித் தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர். இதனால், இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் தராமல், மீதமுள்ள ஆறு இடங்களை சிறிய அரசியல் கட்சிகளுக்கு வழங்கவும், அகிலேஷ்,  மாயாவதி ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

வெள்ளிக்கிழமை இரவு, மாயாவதி இல்லத்தில், அகிலேஷுடன் நடந்த ஆலோசனைக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளனர். 

எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகிலேஷ் யாதவ் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக, காங்., தலைவர் ராகுலை முன்மொழிந்த போதே, வட மாநிலத் தலைவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

தற்போது, அகிலேஷ் - மாயாவதியிடையிலான கூட்டணி மற்றும் அந்த கூட்டணியிலிருந்து,  காங்கிரஸ் கழற்றி விடப்படலாம் என்ற தகவல், ராகுலை, பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் வடமாநில தலைவர்களுக்கு விருப்பம் இல்லாததை காட்டுவதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close