சிவசேனாவை கழற்றிவிட தயாராகும் பா.ஜ.க.

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 10:42 am
bjp-planning-to-break-the-alliance-with-sivasena

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்துப் போட்டியிடுவதற்கு சிவசேனா கட்சி தயாராகி வருகிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா அண்மையில் ஆலோசனை நடத்தியபோது இதற்கான யோசனையை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 48 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த முறை பா.ஜ.க. 24 இடங்களிலும், சிவசேனா 22 இடங்களிலும் போட்டியிட்டன. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதில், பா.ஜ.க. 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்ட போதிலும், தேர்தலுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்தன.

மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் சிவசேனா கட்சி அங்கம் வகிக்கிறது என்ற போதிலும், பா.ஜ.க.வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்களுடன் அமித் ஷா அண்மையில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியை கட்சி முன்னெடுக்கும் என்றும், அதே சமயம் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியதாக பா.ஜ.க. மூத்த எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close