‛எதிர்க்கட்சி தலைவர் பதவி மீது ஆசையில்லை’

  விசேஷா   | Last Modified : 05 Jan, 2019 11:52 am
no-like-on-lop

மத்திய பிரதேசத்தில், தொடர்ந்து, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான், தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது ஆசையில்லை என கருத்து தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்.,வெற்றி பெற்றது.  இதையடுத்து, காங்.,  மூத்த தலைவர் கமல்நாத் அந்த மாநில முதல்வராக பொறுப்பேற்றார். 

இந்நிலையில், பா.ஜ., வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளதால், சட்டசபையில், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரும் வகையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைலவரை தேர்ந்தடுக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ., உள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 15 ஆண்டுகளாக முதல்வர் பதவி வகித்த சிவ்ராஜ் சிங் சவுகான், எதிர்க் கட்சித் தலைவருக்கான போட்டியில் தான் இல்லை எனவும், தனக்கு அந்த பதவியை பிடிக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனால், ம.பி.,சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close