மராட்டியர் பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா? - பா.ஜ.க. முதல்வர் பதில்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 12:01 pm
fadnavis-answer-the-question-about-maharastrian-prime-minister

மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், கேள்வி-பதில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அப்போது 2050-ஆம் ஆண்டுக்குள்ளாக மராட்டியர்கள் பிரதமராக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, நிச்சயமாக முடியும் என்றார் ஃபட்னவீஸ்.

இதுகுறித்து ஃபட்னவீஸ் கூறுகையில், “ஏன் முடியாது? நிச்சயமாக முடியும். இந்தியாவை உணர்வுப்பூர்வமாக உண்மையாகவே ஆண்டவர்கள் உண்டு என்றால், அது மராட்டியர்கள்தான். கோட்டையை அடையும் திறன் மராட்டியர்களுக்கு உண்டு. 2050-ஆம் ஆண்டுக்குள்ளாக ஒன்றுக்கும் மேற்பட்ட மராட்டியர்கள் பிரதமர் பதவிக்கு வருவார்கள்’’ என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் முன்வைக்கும் இடஒதுக்கீடு கோரிக்கை குறித்த கேள்விக்கு ஃபட்னவீஸ் பதில் அளித்தபோது, “ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு கொடுத்தால், இளைஞர்களில் 90 சதவீதம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. அரசு ஒரு ஆண்டுக்கு 25,000 வேலைகளை மட்டுமே வழங்க முடியும். இடஒதுக்கீடு என்பது தீர்வல்ல’’ என்று தெரிவித்தார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close