‛முதல்வர் முகமூடியுடன் ஒரு மாவோயிஸ்ட்’ : பிணராயி மீது ஐயப்ப பக்தர்கள் தாக்கு

  விசேஷா   | Last Modified : 05 Jan, 2019 03:04 pm

pinarayee-like-a-maoist

 

மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவுடன், ஹிந்து தர்மத்தையும், சபரிமலையில் பலஆண்டுகளாக கடைபிடிக்ககப்பட்டு வரும் சம்பிரதாயங்களையும் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, கேரள முதல்வர் பிணராயி விஜயன் மீது, சபரிமலை கர்ம சமிதி அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், அந்த ஆலயத்தின் நடைமுறைக்கு மாறாக சர்ச்சைக்குரிய வயதுடைய பெண்கள் இருவர் அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலின் புனிதம் காக்கவும், ஒருங்கிணைந்த ஐயப்ப பக்தர்கள் குழுவான,  ‛சபரிமலை கர்ம சமிதி’  அமைப்பின் சார்பில்,  மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்திற்கு,  ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து, ‛சபரிமலை கர்ம சமிதி’ தலைவர்,  எஸ்.ஜே.ஆர்.குமார் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் சன்னிதியில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு  மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. 42 மற்றும் 44 வயதுடைய பெண்கள் இருவர், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது மிகப் பெரிய தவறு.  

தொடர்ந்து இது போன்ற தவறுகளை ஏற்க முடியாது. 

மாவோயிஸ்ட்டுகளின் துாண்டுதலால், ஹிந்துக்களின் நம்பிக்கை கேள்விக் குறியாக்கப்படுகிறது. சம உரிமை என்ற பெயரில், ஹிந்துக்களின் மனம் நோகும் வகையில் மாநில அரசு நடந்து கொள்கிறது. 

இதன் பின்னணியில் மாவோயிஸ்ட் சக்திகள் உள்ளன. முதல்வர் பினராயி விஜயன்,  அவர்களுக்கு துணை போகிறார். 

சபரிமலை விவகாரத்தில், மாநில அரசின் போக்கை கண்டித்து, வரும், 11 - 13 வரை மாநிலம் தழுவிய பேரணி மற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். 

மாநிலத்தின், 10 மாவட்டங்களில் நடக்கவுள்ள இந்தப் பேரணியில், வரலாறு காணாத வகையில் மக்கள் கூட்டம் கூட்டமாக பங்கேற்பர்.

அதை தொடர்ந்து, 14ம் தேதி நடக்கும் மகர விளக்கு திருநாளன்று, மாநிலம் முழுவதும், 18 கோடி விளக்குகள் ஏற்றப்படும். 

சபரிமலை கோவிலுக்குள் முறைகேடான வகையில் இரு பெண்களை அழைத்துச் சென்றதையடுத்து, அதற்கு பரிகார பூஜை செய்த தந்திரி மீது, கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கடும் கண்டனத்திற்குரியது. 

  மக்கள் விரோத மார்க்சிஸ்ட் அரசை,. அரசியல் சிம்மாசனத்தில் இருந்து விரட்டி அடிக்க மக்கள் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கர்ம சமிதியின் போராட்டத்திற்கு,  ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

சபரிமலை விவகாரத்தில், ஐதீகத்தை உடைக்க முயற்சிக்கும் பிணராயி விஜயன்,  முதல்வர் முகமூடி அணிந்த மாவோயிஸ்ட்டாகவே தங்கள் கண்களுக்கு தெரிவதாக ஐயப்ப பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.