விவசாய கடன் தள்ளுபடி: 35 லட்சம் பேர் பலனடைவர் !

  விசேஷா   | Last Modified : 05 Jan, 2019 06:09 pm
farm-loan-waver

மத்திய பிரதேசத்தில், 12  டிச., 2018 வரை விசாயிகள் பெற்ற கடன் தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்ய, முதல்வர் கமல்நாத் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக, காங்., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. எனினும், மிகச் சிறிய வித்தியாசத்தில், தேர்தலில் வெற்றி பெற்று, காங்., ஆட்சி அமைத்தது. 

இந்நிலையில், 12 டிச., 2018 வரை விவசாய தேவைக்காக, அவர்கள் பெற்ற வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.  போபாலில் நேற்று, முதல்வர் கமல்நாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக,  அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம், 35 லட்சம் விவசாயிகள் பலன் அடைவர் எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதே போல், ஏழை பெண்கள் திருமணத்திற்கான நிதி உதவியை, 28 ஆயிரத்திலிருந்து, 51 ஆயிரமாகவும் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close