லாலு மகன்களின் சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 10:49 am
political-rift-between-lalu-sons-came-to-end

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகன்கள் இருவருக்கு இடையே நடைபெற்று வந்த அரசியல் ரீதியிலான சகோதர யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

லாலு பிரசாத் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர் அமைச்சராக பதவி வகித்துள்ளார். இளைய மகன் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். தற்போது தேஜஸ்வி யாதவ், பீகார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு லாலுவுக்கு அடுத்தபடியாக தேஜஸ்வி தலைமையேற்க கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இத்தகைய சூழலில், இருவருக்கும் இடையே சகோதர யுத்தம் நடைபெற்று வந்தது. தேஜஸ்வி யாதவுக்கு, கட்சியில் கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார் தேஜ் பிரதாப் யாதவ். சட்டப்பேரவைக்கு செல்லும்போதிலும் கூட, தனது தம்பியை நேருக்குநேர் சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக தேஜஸ்வி யாதவ் நேற்று தனது அண்ணன் தேஜ் பிரதாப் யாதவை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பாதங்களை தொட்டு வணங்கினார். இதன் மூலமாக, இருவருக்கும் இடையிலான பகை முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தேஜ்பிரதாப் யாதவ், “தேர்தல் வருகின்ற சூழலில் என்னுடைய அர்ஜுனனை சந்தித்துள்ளேன். தேர்தல் களத்தில் வெற்றி கிடைக்க அவரை வாழ்த்தினேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close