பா.ஜ.க.வை தோற்கடிக்க காங்கிரஸ் தேவையில்லை - சமாஜ்வாதி கட்சி கருத்து

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 11:56 am
congress-is-a-insignificant-force-and-not-needed-samajwati-leader

நாடாளுமன்றத் தேர்தலின்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கு காங்கிரஸ் கட்சி தேவையில்லை என்று சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இணைந்து தனிக் கூட்டணி அமைத்துள்ளதாக நேற்று அறிவித்தனர். தொகுதிப் பங்கீடு தொடர்பாக அக்கட்சிகள் இடையே ஏறக்குறைய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், காங்கிரஸை கூட்டணியில் இணைக்காததால் தேர்தலில் பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுந்தது. அதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் கிரான்மோய் நந்தா பதில் அளிக்கையில், “உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியே போதுமானது. முக்கியத்துவம் அற்ற காங்கிரஸ் கட்சி அதற்கு தேவையில்லை’’ என்று பதில் அளித்தார்.

சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை என்ற போதிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close