அரசியலுக்கு சோனியா முழுக்கு? தேர்தலில் குதிக்கும் அடுத்த வாரிசு

  விசேஷா   | Last Modified : 07 Jan, 2019 01:20 pm
priyanka-comes-to-politics

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா தீவிர, அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், ராய்பரேலி தொகுதியில், அவரது மகள் பிரியங்கா களம் இறக்கப்பட உள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா,72, உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், தீவிர அரசியலில் ஈடுபடாமலும் இருந்து வந்தார். 

அதை தொடர்ந்து, கட்சித் தலைவர் பொறுப்பு, மகன் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில், சோனியா, வரும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

 கடந்த தேர்தலில் அவர் போட்டியிட்டு வென்ற, உத்தர பிரதேச மாநிலம் ராய்பரேலி தொகுதியில், இந்த முறை, தன் மகள் பிரியங்காவை களம் இறக்க அவர் திட்டமிட்டுள்ளதாக, அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில், அகிலேஷ் - மாயாவதியின் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டாலும், 'சோனியாவின் ராய்பரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதிகளில், அவர்களை எதிர்த்து, தங்கள் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கமாட்டோம்' என, அறிவித்துள்ளனர். 

ஏற்கனவே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் தலைமை உற்சாகம் அடைந்துள்ளது. 

எனவே, இந்த சாதகமான சூழலில், பிரியங்காவை தேர்தல் அரசியலில் களம் இறக்கினால் அது சரியாக இருக்கும் என, சோனியா கருதுகிறார். இதனால், வரும் லோக்சபா தேர்தலில்,  நேரு குடும்பத்தின் அடுத்த வாரிசாக, பிரியங்காவும் அரசியல் பிரவேசம் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close