பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிய அசாம் கன பரிஷத்!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 06:35 pm
agp-quits-bjp-alliance-in-assam

அண்டை இஸ்லாமிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் நிறைவேற உள்ளதால், பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் இருந்து விலகவுள்ளதாக அசாம் கன பரிஷத் கட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில், இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்ஸி, ஜெயின் உள்ளிட்ட மதங்களை சேர்ந்த  சிறுபான்மையினருக்கு எதிராக ஏற்படும் வன்முறை சம்பவங்களால், லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்திருத்தம் கடந்த 2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்டதிருத்தத்திற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசத்திலிருந்து  அகதிகள் என்ற போர்வையில் வந்த இஸ்லாமியர்கள் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  அந்த மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே 'தேசிய குடிமக்கள் பதிவேடு' மூலம் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக  குடியேறி வாழ்ந்து வரும் இத்தகைய மக்களை, நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டால், அசாமில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் அல்லாத பிறமதங்களைச் சேர்ந்த அகதிகள் குடியுரிமை பெற்று விடுவார்கள் என்று அந்த மாநில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தன. அதுமட்டுமின்றி மத்திய அரசின் இந்த முடிவினால், அந்த மாநிலத்தின் பூர்வகுடி மக்களின் கலாச்சாரம் மற்றும் மொழி அழிவை சந்திக்கும் என கூறி அம்மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. 

அசாம் கன பரிஷத் கட்சி, இந்த சட்டதிருத்தத்தை தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இதனால், அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அசாம் கன பரிஷத் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஜி.பி கட்சியின் தலைவர் அதுல் போரா, இதை உறுதி செய்துள்ளார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close