அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் புகார்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 04:33 am
congress-brings-privilege-motion-against-minister-nirmala-sitaraman

ரஃபேல் விவகாரத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி அவர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் காரசார விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சியின் கே.சி வேணுகோபால் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். 

அதில் இரண்டு முறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தியதாக குற்றம் சட்டப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அது தவறு என வேணுகோபால் கூறியுள்ளார். மேலும், ரஃபேல் ஒப்பந்தத்தில் அரசு பேசிமுடித்த விலை சரிதான் என உச்சநீதிமன்றம் அங்கீகரித்ததாக அமைச்சர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம், ஒப்பந்தத்தின் விலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், நிர்மலா சீதாராமன் தவறான தகவலை தெரிவித்ததாகவும் வேணுகோபால் தனது நோட்டீஸில் கூறியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close