ராமர் பிறந்த அறையை காட்ட முடியுமா? மணிசங்கர் அய்யர் பேச்சால் சர்ச்சை

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 10:47 am
manishankar-iyer-speech-about-lord-ram

 

டில்லியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற, காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், ராமர் பிறப்பு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‛தசரத சக்ரவர்த்தியின் அரண்மனையில், 10 ஆயிரம் அறைகள் இருந்ததாக கூறப்படுகிறது.  அவ்வாறு இருக்கையில், ராமர் எந்த அறையில் பிறந்தார் என கூற முடியுமா?

அதை வரையறுத்து கூற முடியாத போது, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை ராம ஜென்ம பூமி எனக் கூறி, அங்கு தான் ராமர் கோவில் கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவது ஏன்?’ என அவர் பேசினார். 

 

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த போது, மத்தியில் காங்., தலைமையிலான ஆட்சி நடந்ததாகவும், அந்த அரசு நினைத்திருந்தால், அந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறினார். 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close