கேரளா, மேற்கு வங்கத்தில் பந்த் - திரிணமூல் - சிபிஎம் மோதல்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 11:11 am
bandh-affects-west-bengal-and-kerala-clashes-between-tmc-cpm

தொழிலாளர் நல கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்க யூனியன் (சி.டி.யூ.) சார்பில் நாடெங்கிலும் 48 மணி பந்த் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் பிற மாநிலங்களில் இந்த பந்துக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அடங்கிய இடதுசாரிகளின் செல்வாக்கு மிகுந்த கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் போராட்டத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பந்துக்கு ஆதரவு இல்லை என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இருப்பினும், இடதுசாரிகள் பல்வேறு இடங்களில் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இதனால், கொல்கத்தா, அசான்சோல்,ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆளுங்கட்சியினருக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மூன்று இடங்களில் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று வேறு பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி, ஒடிஸா மாநிலத்தில் புவனேஸ்வரம் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்க அமைப்புகள் சி.டி.யூ. தொழிற்சங்க யூனியனில் உள்ளன. 


newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close